The style of children's writing forms developed from children to children

சிறுவர்களிடமிருந்து சிறுவர்களுக்காக உருவான சிறுவர் எழுத்துப் படிவங்களின் நடையியல்

Authors

  • Dr. Mohana Dass Ramasamy Department of Indian Studies, University Malaya, Kuala Lumpur, Malaysia.

Keywords:

Children's Literature, Malaysian Children's Literature, ‘Small Literature’ Works, Children's Literature Stylistic, சிறுவர் இலக்கியம், மலேசிய சிறுவர் இலக்கியம், ’சிறு இலக்கியப்’ பணிகள், சிறுவர் இலக்கியத்திய நடையியல்.

Abstract

It can be assured that the children's literature is still at the level of finding its development path and evolving in Malaysia. It is yet reached its matured level. With not many writers have explored to develop his genre, there were new developing trend among the children is emerging now. This is what referred to as Peer-to-Peer Assisted Children's Literature. Sort of write-ups developed by the children to other children were published in the Malaysian dailies, in the forms of stories, articles, excerpts and other scripts. These write-ups were meant to be a guide for other growing students, as they have been producing these works with a variety of stylistic features. The children have chosen the best ways to present their ideas elegantly and attractively to others, using vocabulary in their own style. Beyond the language and grammatical restrictions, the children’s writing can be seen as a medium of expressing their individual stylistics in writing, on a stand-alone basis. Based on this, about 25 articles published in the dailies were selected, collected and analyzed to identify their stylistic features and reveal them accordingly.

 

மலேசிய தமிழ் வளர்ச்சிச் சூழலில் சிறுவர்/குழந்தை இலக்கிய வளர்ச்சி குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே தற்போது வளர்ந்துவரும் சூழலில், இவ்விலக்கிய வகையினைத் தமக்காக தாமே, சிறுவர்கள்/குழந்தைகள், வளர்க்கும் சூழல் தற்போது உருவாகி, வளர்ந்துகொண்டு வருகின்றது. இதனையே சிறுவர்களிடமிருந்து சிறுவர்களுக்காக உருவான சிறுவர் எழுத்துப் படிவங்களின் (Peer-to-Peer Assisted Children Literature) எனக் குறிப்பிடுகின்றோம். மலேசிய தினசரிகளில், குறிப்பிட்ட தினங்களில் வெளிவரும் மாணவர் அங்கம், சிறுவர் அரங்கம் ஆகிய அங்கங்களில் இவர்களின் கதைகள், கட்டுரைகள், துணுக்குகள் மற்றும் ஏனைய எழுத்துப்படிவங்கள் வெளிவந்த வண்ணமாக உள்ளன. வளர்ந்த மாணவர்கள் வளரும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வழித்தடமாக இவை அமைந்துள்ளன. இந்தப் படைப்புகளைப் பன்முக நடையியல் தன்மைகளோடு இவர்கள் எழுதிப்படைத்து வருகின்றனர். இவர்களது எழுத்துப்படிவங்கள் பன்முக நடைத்தன்மைகளை வெளிப்படுத்திக் காட்டுகின்றன. ஒருவர் தனது கருத்துகளை அல்லது தகவல்களைத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் மொழியின் அடிப்படை நியதிகளை இலக்கண விதிகளாக அமைத்திருக்க, அந்த விதிகளுக்கு உட்பட்டு, தனக்கே உரித்த பாணியில் சொற்களங்சியங்களைப் பயன்படுத்தி, நேர்த்தியான முறையில் தனது கருத்துகளைக் கனக்கச்சிதமாகவும் கவர்ச்சியாகவும் பிறருக்கு வழங்கும் பாங்கினையே சிறுவர் நடையியல் எனக் காணலாம். மொழி, இலக்கணக் கட்டுப்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, சிறுவர்கள்/குழந்தைகள் சுயந்த நிலையில், அறிந்தும் அறியாமலும் விதர்ந்த நிலையில் உருவாக்கும் எழுத்துப்படிவங்களில் அவர்களது தனிப்பட்ட நடையியல் வெளிப்பட்டிருப்பதனைக் காண முடிகிறது.  அத்தகைய தன்மையினை அடிப்படையாகக் கொண்டு, நாளிதழ்களில் வெளியான 25 கட்டுரைகளைத் தெரிவுசெய்து, அவற்றின்கண் காணப்பெறும் நடையியல் சிறப்புகளை அடையாளம் கண்டு, அவற்றின் மொழிநடையினை இக்கட்டுரை வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. 

Downloads

Download data is not yet available.

Downloads

Published

2021-08-01

Issue

Section

Articles