தமிழர் சமய வரலாறு: ஒரு பொதுப் பார்வை (The History of Tamil Religion: A General View)
DOI:
https://doi.org/10.22452/JIS.vol12no1.5Keywords:
தமிழர் சமயம், பழந்தமிழ் இலக்கியங்கள், பக்தி இயக்கம், சைவம், வைணவம்., Tamils religion, Ancient Tamil Literatures, Bakthi Movement, Saivisme, Vaishnavisme.Abstract
Tamil religious history transcends time. Since ancient times, the Tamils have believed strongly in god, where it started with worshipping the nature before gradually progressed to demi-gods worshiping. This tradition is developed into an institution in the religious life of Tamils. This is well-documented in Tolkappiyam that the ancient Tamils basically have held up the principles of God, according to different landscaped types of ethnic groups. There were amble of evidences in Sangam literature supporting this. Tamilnadu was ruled by the three kings, then it was taken over by the outsiders Kalabhras and Pallavas since the 3rd BC till the 7th AD. The crippling caste system, war, prostitution and non-vegetarianism which were prevalent during this time were pushed away by them. The Tamils were willingly to adopt principles of peace, unity, discipline, self-control and refusal to meat promoted by the Jainism and Buddhism. As a result of this, both religions garnered influence in Tamil Nadu during the era of Kalabhras until they lost hold in at the end of sixth century. At the same time, the Tamils, too, became intolerance to overtly self-control, fasting and happiness aversion principles promoted by the Jainism and Buddhism, soon they started to avoid their teachings and opt to other options that offer a balanced life-style between the material world and meta-physical world. The renaissance of Hinduism that took place between 6th and 8th century offered an alternatives to them. The icons of Saiva and Vaishnava religions (Nayanmars and Alvars), travelled from a place to another in to sing devotional hymns and spread their religious thoughs. Religious motivation and art conservation started to bloom during this era. This is called as the Bakthi Movement. The development of this Bakthi Movement has vast influence in the lifestyle of the locals, including the virtues of vegetarianism, the life events of Alvars and Nayanmars, the life of the nobles, the egalitarian ideals, the loyalty towards Tamil language, the use of mythology and the sense of locality. This article is aimed to offer a glimpse of ides of such development that experienced by the Tamils.
ஆய்வுச் சுருக்கம்
தமிழர் சமய வரலாறு காலநெடுமையைக் கடந்து விளங்குகின்றது. பண்டைய காலந்தொட்டே தமிழ்மக்கள் கடவுட்கொள்கையுடையவராகத் திகழ்கின்றனர். ஆதியில் இயற்கையைப் போற்றும் வழிபாட்டுமுறையில் தொடங்கி, படிப்படியாக சிறுதெய்வ வழிப்பாடாகத் தமிழர் வாழ்வியல் வளர்ச்சி கண்டது. பன்னெடுங்காலமாக வளர்ந்துவந்த வழிப்பாட்டுமுறைகள் இன்றளவும் தமிழர்தம் சமயவாழ்வில் நிலைபெற்றிருப்பதைக் காணவியலுகின்றது. பழந்தமிழர் நிலப்பாகுபாடு அடிப்படையில் இனக்குழுக்களாக வாழ்ந்த காலந்தொட்டே கடவுட்கொள்கையை முன்னிலைப்படுத்தி வாழ்ந்துள்ளதைத் தொல்காப்பியம் சுட்டுகின்றது. சங்க இலக்கியங்கள் ஐவகை நிலப்பாகுபாட்டைப் பாடும்போது பழங்குடிமக்களின் சமய நம்பிக்கைகளைத் தெளிவுபடக் கூறுகின்றன. சங்கம் மருவிய காலத்தில் தமிழ் மக்களிடையே சமய நம்பிக்கை தொடர்ந்து இருந்து வந்துள்ளது என்பதற்குத் தக்கச் சான்றாக அக்காலப்பகுதியில் தோன்றிய இலக்கியங்களிலுள்ள குறிப்புகள் திகழ்கின்றன. சங்க காலத்தில் மூவேந்தராலும் சிற்றரசர்களாலும் ஆளப்பட்டு வந்த தமிழ்நாடு, கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் அயலவர்களான களப்பிரர், பல்லவர் முதலானோர் ஆட்சிக்குட்பட்டது. சாதி அமைப்பு முறை, போர், மது, மாது, ஊனுண்ணல் போன்றவற்றால் மக்கள் உள்ளம் சலிப்படைந்திருந்தனர். இச்சூழலிலே, நீதிப் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட சமண, பெளத்தத் துறவிகள் வலியுறுத்திய அமைதி, ஒற்றுமை, ஒழுக்கம், புலனடக்கம், புலால் மறுத்தல் போன்ற நெறிகளைத் தமிழ் மக்களும் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். இதனால், களப்பிரர்கள் காலத்தில் சமண, பெளத்தச் சமயங்கள் தமிழ் நாட்டில் செல்வாக்குப் பெறலாயின. ஆயினும், ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் களப்பிரர்கள் தம் அரசியல் செல்வாக்கை இழந்தனர். அதே வேளை, சைனரும் பெளத்தரும் வலியுறுத்தி வந்த புலனடக்கம், உண்ணாநோன்பு, இன்ப வெறுப்பு முதலியவற்றால் மக்கள் சஞ்சலமும் அச்சமும் கொண்டனர். காதல் வாழ்விலும் இல்லற வாழ்விலும் கிட்டிய இன்பமும் பாதுகாப்பும் புறச்சமயக் கொள்கைகளால் பறிபோவதைக் கண்ட மக்கள் தன்னுணர்வு பெற்றனர்; புறச்சமயங்களை வெறுக்கத் தொடங்கினர். இக்காரணங்களால், சமண-பௌத்த சமயங்கள் செல்வாக்கை இழந்தன. இதனைத் தொடர்ந்து கி.பி. 6, 7, 8-ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்தில் சைவ, வைணவ சமயப் பெரியார்களான நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றி, ஊர் ஊராகச் சென்று பக்திப்பாடல்கள் பாடி, தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்பினர். தமிழ் மக்களிடையே சமய எழுச்சியும் கலைப்பாதுகாப்பும் தோன்றலாயின. அதன் விளைவாக, பக்தி இயக்கம் உருபெற்றது. இப்பக்தி இயக்க வளர்ச்சியால் சைவ, வைணவ சமயங்கள் பெற்ற நன்மதிப்பிற்கும் பேராதரவிற்கும் உரிய காரணங்களாக கொள்கைகள், மன்னர்களின் ஆதரவு, நாயன்மார் ஆழ்வார்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள், சமத்துவச் சிந்தனைகள், தமிழ்ப்பற்று, பெண்டிர் ஆதரவு, புராணக்கதைகளைப் பயன்படுத்துதல், வட்டார உணர்வு ஆகியவற்றைக் கூறலாம்.